Monday, April 10, 2006

வானொலியில் வலைப்பதிவுகள்

தமிழ் இணையத்தில், குறிப்பாக வலைப்பதிவுகள் மட்டத்தில் நிகழ்ந்துவரும் முன்னேற்றங்கள் பற்றி இணையத்துக்கு வெளியே இயங்கும் ஊடகங்களில் அதிகம் தெரிவதில்லை. இயன்ற அளவு அத்தகைய ஊடங்ககளில் இந்த செய்திகள் வரச்செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் சில முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். அவற்றில் ஒன்று வானொலி மூலம் சுருக்கமாக சில செய்திகளை சொல்லுவது. அகில இந்திய வானொலியின் கோவை நிலைய இயக்குநர் கலைமாமணி முனைவர் சேயோன் அவர்களுடன் இதுபற்றி அளவளாவியபோது இதற்கு ஒரு வழிகிடைத்தது. அதன்மூலம் வாராவாரம் கோவையிலிருந்து ஒலிபரப்பாகும் ரெயின்போ எஃப்.எம். மூலமாக ஒரு உரையாடல் வடிவத்தில் சில தகவல்களை பரிமாறிக்கொள்ள இருக்கிறோம். முதல் நிகழ்ச்சி சென்ற வாரம் செவ்வாயன்று முற்பகல் 11:00 முதல் 12:00 வரை ஒலிபரப்பாகும் வண்ணக்களஞ்சியத்தினூடே ஒலிபரப்பானது. இனி தொடர்ந்து செவ்வாயன்று சுமார் 11:30 மணிக்கு இந்த தொடர் உரையாடல் ஒலிபரப்பாகும். வாய்ப்புக்கொடுத்த திரு. சேயோனுக்கு நன்றி.

49 Comments:

Blogger SnackDragon said...

காசி , உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்களும் ஆதரவும்.

8:18 AM, April 10, 2006  
Blogger Vassan said...

வாழ்த்துகள் காசி. பிறருக்கு வேறு வகைகளிளும் ஊக்கமளிக்கும்
உங்களது தளரா முயற்சிகள் பாராட்டுதல்களுக்குரியவை.

நன்றிகளும்.

8:23 AM, April 10, 2006  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

வாழ்த்துகள் காசி.

8:31 AM, April 10, 2006  
Blogger - யெஸ்.பாலபாரதி said...

வாழ்த்துக்கள் காசியண்ணா..
கலக்குங்க..
:)

8:37 AM, April 10, 2006  
Blogger நாமக்கல் சிபி said...

தமிழ் வலைப்பதிவர்களின் படைப்புகளை வானொலி ஊடகத்தின் மூலமும் வெளிப்படுத்த தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

8:38 AM, April 10, 2006  
Blogger thiru said...

காசி, தமிழ்மணத்தின் முயற்சிகளால் வலைப்பூக்களின் படைப்புகள் பரவட்டும். வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு.

8:39 AM, April 10, 2006  
Blogger Boston Bala said...

செய்தியைப் படித்தது, மகிழ்ச்சியாக இருக்கிறது. உரையாடலைக் கேட்டுவிட்டு பின்னூட்டத்தைத் தொடர்கிறேன் :-)

8:43 AM, April 10, 2006  
Blogger சிங். செயகுமார். said...

வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன்!
சித்தூர்காரன் சிந்தனையில்!
வையகத்தில் வலைதளத்தில்!
உள்ளங்கையில் உலகமொழி!
தமிழ் மொழி தழைத்தோங்க!
தன்னலம் கருதா!
தமிழன்னையின் தவபுதல்வனே!
வாழ்க நீ!
வளங்கள் பல கண்டு!
உளமாற வாழ்த்துகின்றேன்!

8:44 AM, April 10, 2006  
Blogger -/பெயரிலி. said...

காசி
அலட்டிக்கொள்ளாமல் செயலாற்றும் உங்களை வாழ்த்த வயதில்லை; வணங்கி அவமரியாதை செய்யவிருப்பில்லை; ஆதரவு என்று சொல்லிவிட்டு 'எஸ்கேப்' ஆக விருப்பமில்லை ;-)
அதனால், நல்லது என்றுமட்டும் சொல்லிக்கொள்கிறேன்

8:51 AM, April 10, 2006  
Blogger Venkat said...

காசி - மிக நல்ல விஷயத்தை முன்னெடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

இதுபோன்ற ஊடகங்களின் குறுக்குப் பாய்ச்சல் மிக முக்கியமானது. எப்படி வானொலிகளிலும், தாள்களிலும், தொலைக்காட்சியிலும் வருபவனவற்றை ஒட்டியும் வெட்டியும் வலைப்பதிவுகள் எழுதப்படுகின்றனவோ அதேபோல வலைப்பதிவுகளில் 'மாத்திரமே' எழுதப்படுபவற்றை அவற்றை வாசிக்கமுடியாத பிறருக்கும் கொண்டு செல்வது நல்ல முயற்சி.

முடிந்தால் இந்த வானொலி நிகழ்ச்சிகளை வலையேற்ற முயற்சிக்கலாம் (என்னைப் போன்ற அசலூர்காரங்களையொட்டிய சுயநலம்தான்) :)

9:00 AM, April 10, 2006  
Blogger இளங்கோ-டிசே said...

நல்லதொரு விடயம் காசி.
வாழ்த்து!

9:14 AM, April 10, 2006  
Blogger Kasi Arumugam said...

வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

//தமிழ் வலைப்பதிவர்களின் படைப்புகளை வானொலி ஊடகத்தின் மூலமும் வெளிப்படுத்த// இது ரொம்ப அகலக்கால் பாய்ச்சல், இது இப்போதைக்கு முடியுமா, தேவையா என்று சொல்லமுடியவில்லை. நான் செய்ய நினைத்திருப்பது, இணையத்தில் தமிழ் வளர்ச்சி, குழுமங்கள், வலைப்பதிவுகள், யுனிகோடு, போன்ற விடயங்கள். வலைப்பதிவுகளின் உள்ளடக்கம் பிறகே வரும்.

வெங்கட், நன்றி. முதல் வார ஒலிக்கோப்பை வலையேற்றியிருக்கிறேன். அதில் நான் நினைத்தபடியல்லாமல், 'தமிழ்மணம்' என்ற சொல்லைச் சுற்றி அதிகநேரம் பேசவேண்டியிருந்தது, என்னை தமிழ்மணம் காசி என்று சொல்லிக்கொண்டதாலோ என்னவோ. திரு. சேயோன், என் தொழில்நிறுவனத்தின் இஅய்க்குநர் என்ற ரீதியில் அறிமுகம் செய்யவிருந்தார், அதற்கும் உரையாடலின் பொருளுக்கும் தொடர்பில்லாததால், நான் 'தமிழ்மணம்' காசி என்று சொல்லிக்கோண்டேன். அவ்வளவுதான். இனி அடுத்து வரும் வாரங்களில் பொதுவான விடயங்களை சொல்லமுடியும் என்று நம்புகிறேன்.

9:25 AM, April 10, 2006  
Blogger Mookku Sundar said...

காசி,

இதற்காகவென்றே தனி வலைப்பதிவு துவக்கியிருப்பதைப் பார்த்தால், இன்னமும் நிறைய ஊடக நிகழ்ச்சிகளில்/ செய்திகளில் வலைப்பூக்களைப் பற்றி வரும் போலிருக்கிறது. என் மனமார்ந்த நன்றிகள்.

"குமுதம்" ரிப்போர்ட்டரைப் படித்தவர்கள் இந்த நிகழ்ச்சியையும் கேட்க வேண்டும் என்பது என் அவா!!! அது ரொம்ப முக்கியம்.

9:27 AM, April 10, 2006  
Blogger Kasi Arumugam said...

சுந்தர் ;-)

வாராவாரம் உரையாடுவதை இங்கே போடலாமே என்றுதான், மற்றபடி //ஊடக நிகழ்ச்சிகளில்/ செய்திகளில் வலைப்பூக்களைப் பற்றி வரும் போலிருக்கிறது// என்பதைப் பற்றி நான் சொல்லமுடியாது. உங்களோடுகூடப் பேசாமலேயே உங்கள் குடும்பத்தார் நினைப்பதையெல்லாம் எழுதக்கூடிய திறமைவாய்ந்தவர்கள் உள்ள ஊடகங்கள் உண்டு:-)

9:32 AM, April 10, 2006  
Blogger -/பெயரிலி. said...

/"குமுதம்" ரிப்போர்ட்டரைப் படித்தவர்கள் இந்த நிகழ்ச்சியையும் கேட்க வேண்டும் என்பது என் அவா!!! அது ரொம்ப முக்கியம். /

இளைய இளையராசா அண்ணே. இது அசல் கோழி அமுக்கு ;-)

9:35 AM, April 10, 2006  
Blogger கோவி.கண்ணன் said...

இனி வார வாரம், ஆரவாரமா !
காசி உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

உங்கள் வானொலி நிகழ்ச்சிக்கு சின்ன யோசனை,
தலைப்புகளை கீழ்க்கண்டவாறு அமைக்கலாம் :

1. வலைப்பதிவில் இன்று
2. தமிழ் மணத்தில் இன்று
3. இந்தப் பூ வலைப்பூ
4. வலையில் கிடைத்த முத்து
5. பார்த்தவெரல்லாம் பதியலாம்
6. கம்யூட்டரில் கலாய்கலாம் வாருங்கள்
7. வலைப்பூ நேரம்
8. மணம் மணம் தமிழ்மணம்
9. தமிழே பூச்சூட வா
10. இன்றைய நட்சத்திரம் என்ன சொல்கிறார்
11. பூ பூவாய் தமிழ்ப்பூ
12. இன்சுவை தமிழ்மணம்
13. வலையில் சுட்ட பழம்
14. புதிவில் புதுசு
15. இன்றைய சிறந்த பதிவுகள்

அப்பாட மூச்சு வாங்குது.

கோவி.கண்ணன்

10:01 AM, April 10, 2006  
Anonymous Anonymous said...

காசி அவர்களே! நீங்கள் திரு. சேயோனுடன் வனொலியில் வலைப்பதிவுகளைப் பற்றி உரையாடியதைக் கேட்கும் போது, தமிழ் வலைப்பதிவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்து பெருமையாக இருந்தது. அதற்கு விடாது உழைக்கும் உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து ஒலிப்பெட்டகத்தினை உங்களது வலைப்பூவில் தரவேற்றம் செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்,
ஜான் போஸ்கோ

10:14 AM, April 10, 2006  
Blogger வெளிகண்ட நாதர் said...

நல்லதொரு முயற்சி காசி, வாழ்த்துக்குள்!

10:24 AM, April 10, 2006  
Blogger மதுமிதா said...

வாழ்த்துகளைப்பிடிங்க
நன்றி காசி

சேயோன் அடுத்த வாரம்(ஏப்ரல்16)ராஜபாளையம் போகிறார்.நூல் வெளியீடு என்று.

இங்கே சென்னை பல்கலைக்கழகத்தில் ரஜினிபெத்துராஜா வின் நூல் வெளியீடு நிகழ்வில் அவரை சந்தித்தோம்.அன்று தான் சென்னையிலிருந்து கோவை கிளம்புகிறார்.

சேயோனுக்கும் நன்றியினைத் தெரிவியுங்கள்.

10:29 AM, April 10, 2006  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//உங்களோடுகூடப் பேசாமலேயே உங்கள் குடும்பத்தார் நினைப்பதையெல்லாம் எழுதக்கூடிய திறமைவாய்ந்தவர்கள் உள்ள ஊடகங்கள் உண்டு:-)
//

:)

10:44 AM, April 10, 2006  
Blogger பரி (Pari) said...

வாழ்த்துகள் காசி.

10:45 AM, April 10, 2006  
Blogger சின்னக்குட்டி said...

வாழ்த்துக்கள்...காசி அவர்களே...

11:25 AM, April 10, 2006  
Blogger Sivabalan said...

A nice try. Many wishes!!

I got excited to hear some good news about Coimbatore.
Actually I am from Coimbatore but now I am in Chicago,USA.

11:46 AM, April 10, 2006  
Anonymous Anonymous said...

நல்ல முயற்சி!

வாழ்த்துகள் காசி!!

.:dYNo:.

12:16 PM, April 10, 2006  
Blogger துளசி கோபால் said...

மனம் கனிந்த பாராட்டுக்கள் காசி.

நல்லா இருங்க.

2:06 PM, April 10, 2006  
Blogger Mookku Sundar said...

//இளைய இளையராசா அண்ணே. இது அசல் கோழி அமுக்கு ;-)//

இது அக்மார்க் ஆள் அமுக்கு
;-) :-).

நாம்பாட்டுக்கு பாட்டு பாடிக்கிட்டு ஜாலியா சுத்தறது, உங்களுக்கு புடிக்கலையா..??

2:24 PM, April 10, 2006  
Blogger Kasi Arumugam said...

வாழ்த்திய அனைவருக்கும் மீண்டும் நன்றி. மதுமிதா, சேயோன் அவர்களிடம் சொல்கிறேன்.

7:09 PM, April 10, 2006  
Blogger ஜோ/Joe said...

காசி,
எங்கள் நன்றியும் ஆதரவும் உங்களுக்கு எப்போதும் உண்டு.

7:35 PM, April 10, 2006  
Blogger Muthu said...

kasi,

while thanking i also wish you all the best in your your efforts..

8:47 PM, April 10, 2006  
Blogger தருமி said...

நெஞ்சார்ந்த நன்றியும்,
வாழ்த்துக்களும்.......

8:52 PM, April 10, 2006  
Blogger Pot"tea" kadai said...

காசி, முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

9:39 PM, April 10, 2006  
Blogger Pavals said...

வாழ்த்துக்கள்

10:02 PM, April 10, 2006  
Blogger Pavals said...

வாழ்த்துக்கள் !!

10:04 PM, April 10, 2006  
Blogger இராதாகிருஷ்ணன் said...

மகிழ்ச்சியாக உள்ளது காசி,வாழ்த்துகளும் பாராட்டுகளும்! ஒலி அல்லது உரைக் கோப்பை இங்கு சேர்த்தால் வசதியாக இருக்கும். நன்றி!

10:17 PM, April 10, 2006  
Blogger மணியன் said...

வாழ்த்துக்கள்!!
//முதல் வார ஒலிக்கோப்பை வலையேற்றியிருக்கிறேன்.// எங்கே என்று தெரியவில்லையே? :(

10:41 PM, April 10, 2006  
Blogger செல்வநாயகி said...

நல்ல விடயம் காசி. மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!

10:43 PM, April 10, 2006  
Blogger மணியன் said...

வாழ்த்துக்கள்!!
அலுவலகத்தில் கேட்கமுடியவில்லை.:(
firewall blocked :((

10:50 PM, April 10, 2006  
Blogger Thangamani said...

மகிழ்ச்சியான விதயம் காசி. நன்றி..

//நான் நினைத்தபடியல்லாமல், 'தமிழ்மணம்' என்ற சொல்லைச் சுற்றி அதிகநேரம் பேசவேண்டியிருந்தது, என்னை தமிழ்மணம் காசி என்று சொல்லிக்கொண்டதாலோ என்னவோ. திரு. சேயோன், என் தொழில்நிறுவனத்தின் இஅய்க்குநர் என்ற ரீதியில் அறிமுகம் செய்யவிருந்தார், அதற்கும் உரையாடலின் பொருளுக்கும் தொடர்பில்லாததால், நான் 'தமிழ்மணம்' காசி என்று சொல்லிக்கோண்டேன். அவ்வளவுதான். இனி அடுத்து வரும் வாரங்களில் பொதுவான விடயங்களை சொல்லமுடியும் என்று நம்புகிறேன். //

தமிழ்மணத்தை இணையத்தமிழைப் பற்றி பேசும் போதும், குறிப்பாக வலைப்பதிவுகளைப்பற்றி பேசும் போதும் குறிப்பிடுவது ஒரு பாவச்செயல் அல்லவே. இன்றைக்கு நூற்றுக்கணக்கான பலதுறைகளைச் சேர்ந்த, பலநாட்டில் வதியும் தமிழார்வம் கொண்டவர்கள் முனைந்து எழுதுவதற்கு தமிழ்மணம் ஒரு களமாக, வாசலாக, ஊக்குவிக்கும் சக்தியாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது. இணையத்தமிழ் என்ற வகையில் (மற்ற ஊடகத் தமிழ் போன்று) சில நிறுவனங்களின் பிடியில், வார்ப்பில் தமிழர்களின் கருத்து, விருப்பம், கலை, இலக்கியம் என்பது இதுதான் என்று கிடந்த தமிழ் இன்று வலைப்பதிவு வழங்குகிற வசதியால் நிறுவனங்களின் கட்டமைப்புகளை உடைத்து வெளியேறியபோது அது சிதறிவிடாமலும், தேங்கி அழிந்துவிடாமலும் கட்டற்று நடப்பதற்கு தமிழ்மணம் ஒரு முக்கியமான காரணம். வலைப்பதிவுகளின் பங்கையும், தமிழ்மணத்தின் பங்கையும் குறிப்பிடுவது இணையத்தமிழைப்பற்றிய சரியான பதிவுகளில் செய்யப்படவேண்டியது.
உங்களது தயக்கத்தை புரிந்துகொள்ள முடிந்தாலும் அப்படியான துரதிர்ஷ்டம் தமிழுக்கு வாய்ப்பது புதிதான ஒன்றல்ல என்பதும் புரிகிறது.

10:55 PM, April 10, 2006  
Blogger ப்ரியன் said...

வானொலியில் வலைப்பதிவா வாழ்த்துக்கள் உங்களுக்கும் நம் கோவை வானொலிக்கும் :)

11:30 PM, April 10, 2006  
Blogger டிபிஆர்.ஜோசப் said...

வாழ்த்துக்கள் காசி. உங்களுடைய முயற்சி நிச்சயம் வெற்றிபெறும்.

11:55 PM, April 10, 2006  
Anonymous Anonymous said...

காசி அண்ணாச்சி,

வாழ்த்துகள்!!
இப்படில்லாம் ஓரவஞ்சனை ப்ண்ணாம,
உங்க பேச்சை அப்படியே வலைப்பக்கம்
போட்டீங்கன்னா, ஐக்கிய அரபு அமீரகத்துல இருக்குற மக்களும் கேக்குற மாதிரி ஏசியாநெட் தமிழ் நிகழ்ச்சில அதை சேர்த்துக்குவோம்ல. யோசிங்க. யோசிச்சுட்டு தனிஅஞ்சல்ல வேணும்னாலும் தொடர்பு கொள்ளுங்க - எப்படிச் செய்யலாம்னு.

சாத்தான்குளத்தான்

12:20 AM, April 11, 2006  
Blogger தங்ஸ் said...

Vaazthukkal Kasi! Irunga, enga veettula(kaattula) kettangalaa-nnu kettu solren..

8:52 AM, April 11, 2006  
Blogger ilavanji said...

காசியண்ணே!

நல்லதொரு செய்தி! வாழ்த்துக்கள்!!!

////உங்களோடுகூடப் பேசாமலேயே உங்கள் குடும்பத்தார் நினைப்பதையெல்லாம் எழுதக்கூடிய திறமைவாய்ந்தவர்கள் உள்ள ஊடகங்கள் உண்டு:-) //

மொததடவை படிக்கறப்ப புரியலை! இட்லிவடையின் அப்டேட்டுக்கு அப்பறம் புரியுது! :)

9:21 AM, April 11, 2006  
Blogger தகடூர் கோபி(Gopi) said...

காசி,

வாழ்த்துக்கள்

எங்களைப் போன்று கோவை FM Rainbow கேட்க இயலாதோருக்காக

1) ஒலிக் கோவையாக்கி வலையேற்றலாம்.

2) ராஜ் FM இணைய வானொலி நிறுவனத்தினருடன் கலந்தாலோசித்து
இணையத்திலும் ஒலி பரப்பலாம்.

8:13 AM, April 18, 2006  
Blogger ரவி said...

நல்ல முயற்சி!

வாழ்த்துகள் காசி!!

ரவி,
தாய்லாந்து...

1:38 AM, April 25, 2006  
Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

வாழ்த்துக்கள் நல்ல முயற்சி

3:31 AM, April 25, 2006  
Blogger இரா.சுகுமாரன் said...

உங்கள் பணி மேலும் மெருகேறிக் கொண்டிருக்கிறது வாழ்த்துக்கள்

3:59 AM, April 25, 2006  
Anonymous Anonymous said...

வாழ்த்துக்கள்

=இஸ்மாயில் கனி
சவுதி அரேபியா

5:07 AM, April 25, 2006  
Blogger Marutham said...

Muyarchi vetri pera vaazhthukkal! :)

1:50 AM, December 20, 2007  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home