Monday, April 24, 2006

மூன்றாவது வார உரையாடல்

கோவை ரெயின்போ எஃப் எம் உரையாடல் பற்றிய என் முந்தைய பதிவுகள் இங்கே:

வானொலியில் வலைப்பதிவுகள்
முதல் வார உரையாடலின் ஒலிக்கோப்பு
இரண்டாம் வார உரையாடலின் ஒலிக்கோப்பு

மூன்றாம் வார உரையாடலின்போது இன்னும் கொஞ்சம் இறுக்கம் குறைந்து தோழமையுடன் உரையாடமுடிந்தது. நீண்டுவிட்ட இந்த வார உரையாடலின் ஒலிக்கோப்பை இங்கே வலையேற்றியிருக்கிறேன்.

http://kasilingam.com/media/inaiyam_radio_3.mp3

7 Comments:

Blogger துளசி கோபால் said...

அன்புள்ள காசி,

இந்த முறை இயல்பா வந்துருக்கு.
எல்லாம் ஃபோன் மூலமாவா?

வாழ்த்து(க்)கள். நல்லா இருங்க.

8:34 PM, April 24, 2006  
Blogger Sivabalan said...

Good One!!

Keep up!!

8:42 PM, April 24, 2006  
Blogger Voice on Wings said...

நல்ல முயற்சி.

'கட்டுப்பாடுகளற்ற சுதந்திரம்' பற்றி அச்சம் தெரிவித்து கேட்கப்பட்ட கேள்விக்கு உங்கள் விடை கொஞ்சம் திருப்திகரமாக இல்லை. "தவறான கருத்துகளும் வந்துவிடுமே?" என்ற கேள்வி பொது ஊடகங்களின் இயற்கையான சிந்தனைப் போக்கையே வெளிப்படுத்துகிறது. (எது தவறென்பதை யார் நிர்ணயிப்பது?) அத்தகைய 'தவறான' கருத்துகளுக்கும் மேடையமைத்துக் கொடுப்பதில்தான் வலைப்பதிவின் வெற்றியே இருக்கிறது. இதை நீங்கள் வானொலியில் கூறயிருக்க முடியாதுதான். இருந்தும், இந்த எதிர்வினையைப் பதிவு செய்யத் தோன்றியது.

9:59 PM, April 24, 2006  
Blogger ilavanji said...

காசி,

இந்தமுறை சிறப்பாகவும் வெகு இயல்பாகவும் வந்திருக்கிறது!

வாழ்த்துக்கள்! :)

10:42 PM, April 24, 2006  
Blogger Kasi Arumugam said...

துளசி, நன்றி. ஆம் இது தொலைபேசிவழி நடந்த உரையாடல்தான்.

VoW, நன்றி. //(எது தவறென்பதை யார் நிர்ணயிப்பது?)// உண்மையே. இது மிக ஆரம்பக் கட்டப் புரிதலுக்கான நிகழ்ச்சிதானே. மேலும் இந்த உரையாடலின் இலக்கு ஒரு பொதுவான வானொலி நேயரே. உங்கள் எதிர்வினையைப் பதிவுசெய்தது பாராட்டுக்குரியது.

இளவஞ்சி, ஆமாம் இயல்பாக வந்ததாக நானே உணர்ந்தேன். இப்போதுதா நான்காவது வாரம் முடிந்து வந்தேன். அடுத்தவாரம் வலையேற்றுகிறேன்.

சிவபாலன், நன்றி:-)

11:37 PM, April 24, 2006  
Blogger Udhayakumar said...

காசி, கலக்கிட்டீங்க... இன்னைக்குத்தான் மூன்றையும் தொடர்ந்து கேட்டேன். வித்தியாசம் தெரியுது...

எங்கம்மாவிற்க்கு இதை நான் எப்படி புரிய வைப்பேன்னு முழிச்ச்ப்போ சமயம் பார்த்து mp3 குடுத்துடீங்க... ரொம்ப நன்றி!!!!

12:34 AM, April 25, 2006  
Blogger Venkat said...

காசி - ஒலிப்பதிவுகளில் இரைச்சல் அதிகமாக இருக்கிறது. இதை Audigy போன்ற பொதி கொண்டு மிக எளிதாகக் கழிக்கலாம். லினக்ஸ்-க்காக உருவாக்கப்பட்ட Audigy விண்டோஸிலும் செயல்படும் என்று நினைக்கிறேன்.

இரைச்சல் இருக்குமிடத்தில் ஒரு சிறிய துண்டை வெட்டி எடுத்து அதைக் கோப்பு முழுதும் கழித்தால் கோப்பின் தரம் நன்றாக இருக்கும். அளவும் குறையும்.

முயற்சி செய்து பாருங்களேன்.

10:41 AM, April 25, 2006  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home